தமிழகம் வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஈபிஎஸ் சந்திக்காதது ஏன்?- தமிழிசை பதில்

 
தமிழிசை தமிழிசை

அதிமுக - பா.ஜ.க கூட்டணி உறுதியாக உள்ளது. NDA கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வருவார்கள் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “தமிழ்நாட்டில் இந்தாண்டு அரசியல் கட்சி கொண்டாடும் முதல் பொங்கல் விழாவை நாங்கள் கொண்டாடியுள்ளோம். பொங்கல் விழாவில் உள்துறை அமைச்சர் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மகிழ்ச்சி 2026 வரை தொடரும். தமிழ் கலாச்சாரத்தையும் எங்களையும் பிரிக்க முடியாது.

அரசியல் என்றாலே மாற்றங்கள் நிறைந்தது தான். அமித்ஷா வருகை எங்களுக்கு மாற்றம், எதிர்கட்சிகளுக்கு ஏமாற்றம். அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாக தான் உள்ளது. இன்னும் சில கட்சிகள் வந்தால் எங்களுக்கு கூடுதல் பலம். நேற்று நடந்த பொதுக்கூட்டம் பா.ஜ.க வின் கூட்டம் தானே தவிர தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டம் கிடையாது. ஆனால் சிலர் இந்த கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்து உள்ளதாக கூறுகிறார்கள். அப்படி கிடையாது.அதிமுக- பாஜக கூட்டணியே உறுதியான கூட்டணிதான்” என்றார்.