சந்திராயன் 3 வெற்றி- மோடி தலைமையிலான அரசின் மாபெரும் சாதனை- தமிழிசை

 
tamilisai modi

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) அனுப்பியுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.

Image

இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “நம் பாரத திருநாட்டின் பெருமையை உலக அரங்கில் நிலைநாட்டிக்கொண்டிருக்கும் மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசின் மாபெரும் வரலாற்று சாதனையான சந்திராயன்-3 விண்கலம் மூலம் நிலவில் தடம் பதித்தது விக்ரம் லேண்டர்,நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை பெற்றது நம் இந்தியா திருநாடு.....

No bill pending with Telangana governor's office: Tamilisai | Latest News  India - Hindustan Times

நம் இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்த்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் #சந்திராயன்_3 விண்கலத்தை விண்ணில் செலுத்தி அதன் செயல்பாடுகளை கண்காணித்து நிலவில் தடம்பதிக்க பணியாற்றிய இஸ்ரோ விஞ்ஞானிகள்,பணியாளர்கள் மற்றும் பங்களித்த அனைவருக்கும் வாழ்த்துக்களையும்,பாராட்டுகளையும்  தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.