பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான சூழ்நிலையை உறுதி செய்ய வேண்டும் - தமிழிசை

 
Tamilisai

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நியூஸ்-7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் சகோதரர் திரு.நேசபிரபு அவர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.


பாதிக்கப்பட்ட செய்தியாளர் சகோதரர்  திரு.நேசபிரபு அவர்கள் விரைவில் பூரண உடல்நலம் பெற்று வீடுதிரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவரது  குடும்பத்திற்கு எனது ஆறுதலை தெரிவிப்பதோடு, கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான சூழ்நிலையை உறுதிசெய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.