கள்ளக்குறிச்சியை "கள்ளச்சாராய குறிச்சியாக" மாற்றியதுதான் திராவிட மாடல்- தமிழிசை

 
tamilisai

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டத்தில், கருணாபுரம் காலனியைச் சேர்ந்த 18 பேர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்துள்ளனர். சுரேஷ், பிரவீன், சேகர், மணிகண்டன், மணி, தனக்கோடி, ஆறுமுகம், ராமு, கிருஷ்ணமூர்த்தி, நாராயணசாமி, இந்திரா, டேவிட், கந்தன், வடிவு, சுப்ரமணி உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனைகளில் உள்ள 60 பேரில், 10 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழிசை செளந்தரராஜன், “"கள்ளங்கபடம் இல்லாத கள்ளக்குறிச்சியை" - "கள்ளச்சாராய குறிச்சியாக" மாற்றியதுதான் திராவிட மாடல்... உயிரிழந்தவர்களை நினைத்து வேதனை அடைகிறேன்... கவலைக்கிடமாக இருப்பவர்களை நினைத்து கவலை அடைகிறேன்.... அவர்கள் நலம் பெற பிரார்த்திக்கிறேன்.....

கள்ளச்சாராயமோ.... எந்த சாராயமோ.... இல்லாத ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும்...” எனக் குறிப்பிட்டுள்ளார்.