#Breaking மீண்டும் பாஜகவில் இணைந்தார் தமிழிசை சௌந்தரராஜன்
Mar 20, 2024, 12:13 IST1710917015442

தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை செளந்தரராஜன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மீண்டும் பாஜகவில் இணைந்தார்.
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மீண்டும் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
தமிழிசை செளந்தரராஜனுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார் அண்ணாமலை. மக்களவைத் தேர்தலில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.