“அண்ணாமலை தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும்''- தமிழிசை
தேர்தலில் தம்பி அண்ணாமலைக்கு சீட் மறுக்கப்படவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அண்ணாமலையின் பெயர் இடம்பெறவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு, தோல்வி அடைந்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “தேர்தலில் நம்பி அண்ணாமலைக்கு சீட் மறுக்கப்படவில்லை. பாஜக பட்டியலில் மூத்தவர்களும் உள்ளனர். இளையோரும் இருக்கிறார்கள். சரியானவர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. யாருக்கும் வாய்ப்பு மறுக்கப்படுவதும் இல்லை. யாரும் புறக்கணிக்கப்படுவதும் இல்லை. அண்ணாமலை தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும். அண்ணாமலையின் பிரசாரம் என்டிஏ கூட்டணி வேட்பாளர்களுக்கு பலமாக இருக்கும்'” என்றார்.

