"மாட்டுக்கறியை மட்டும் சாப்பிடுவீங்க.. ஆனா கோமியத்தை குடிக்க மாட்டீங்களா?"- தமிழிசை

 
தமிழிசை

மாட்டுக்கறி சாப்பிடுவார்களாம்... ஆனால் சிறுநீரை எதிர்ப்பார்களாம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து கூறியுள்ளார்.

tamilisai


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “கோமியம் குடித்தால் டாஸ்மாக் விற்பனை குறைந்துவிடுமோ என்று பயப்படுகிறார்கள். மாட்டுக்கறியை மட்டும் சாப்பிடுவீர்கள்.. ஆனால் கோமியத்தை குடிக்க மாட்டீங்களா? மாட்டின் சிறுநீரை மருந்தாக உட்கொள்ளலாம் என அறிவியல் ஆதாரத்தோடு பேசினால் அரசியல் கட்சிகள் எதிர்ப்பார்களாம். ஆயுர்வேதத்தில் மாட்டின் சிறுநீர் அமிர்த நீர் என சொல்லப்பட்டிருக்கிறது. மாட்டுக்கோமியத்தை 80 வகையான நோய்களுக்கு பயன்படுத்தலாம். 

பரந்தூர் மக்கள் 909 நாட்களாக போராடியபோது விஜய் என்ன செய்து கொண்டிருந்தார்? பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு செல்ல விஜய் பறந்து போனாரா? இல்லை மறந்து போனாரா? சினிமாவில் நடிக்கும்போது பரந்தூரில் மக்கள் ஓலம் போட்டால் அவருக்கு காதிலேயே விழாது. டேக் மட்டும் தான். இப்போது சினிமா முடிந்து டேக் ஆஃப்க்காக அங்கே போய் இருக்கிறார்.” என்றார்.