த.வெ.க கொடி மங்களகரமாக இருக்கிறது- தமிழிசை

த.வெ.க கொடி மஞ்சளும், குங்குமமாக மங்களகரமாக இருக்கிறது என பா.ஜ.க நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன், “விஜயின் கட்சிக் கொடியில் வாகை மலர்தான் இருந்தது. தாமரை மலர் இல்லை. தாமரை மலர் இருந்திருந்தால் நாங்களும் எங்களது கருத்துக்களை பதிவு செய்திருப்போம். கொடி ஏற்றிய முதல்நாளிலேயே யானை சின்னத்தால் விஜய்க்கு பிரச்சனை வந்தது. விமர்சையாக கொடி ஏற்றியதால் விமர்சனம் வர வாய்ப்பிருக்கிறது. விமர்சனம் வருவது ஆரோக்கியமான அரசியல்தான். விமர்சனம் வரவில்லை என்றால் அரசியல் கட்சி பிரபலம் அடைய முடியாது.
தமிழகத்தில் பாஜ௧ மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. யார் வேண்டுமானாலும் பொதுமக்களுக்கு சேவை செய்ய வரலாம். அந்த சேவைக்கு வரும் தம்பி விஜய்க்கு வாழ்த்துக்கள். ஆனால் அந்த சேவை பொதுமக்களுக்கு முழுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. த.வெ.க கொடி மஞ்சளும், குங்குமமாக மங்களகரமாக இருக்கிறது” என்றார்.
-