எவ்வளவு கிண்டல் செய்தாலும் தமிழ்நாட்டில் தாமரை மலரத்தான் செய்யும்- தமிழிசை

 
Tamilisai

தென் சென்னை மக்கள் ஒரு நல்ல வேட்பாளரை தேர்வு செய்யவில்லை என்பதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன் என பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டிளித்துள்ளார்.

‘என் கோட்டும், நோட்டும் 'ஒயிட்'.. ரூ.2 ஆயிரம்  நோட்டு தடை குறித்து கவலை இல்லை -  தமிழிசை கருத்து


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், “தென் சென்னை மக்கள் ஒரு நல்ல வேட்பாளரை தேர்வு செய்யவில்லை என்பதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். தென் சென்னையில் அரசியல் சார்பற்று சேவை செய்ய வேண்டும் என்ற இளைஞர்கள் என்னோடு இணையலாம். தென் சென்னையில் நாங்கள் தேர்வு செய்யப்பட்டாலும், செய்யப்படவில்லை என்றாலும் நாங்கள்தான் நாடாளுமன்ற உறுப்பினர். மக்கள் சேவையில் தென் சென்னை வேட்பாளரெல்லாம் என் பக்கத்தில் கூட நிற்க முடியாது.

Image

அதிமுக - பாஜக கூட்டணி அமைத்திருந்தால் நிறைய இடங்கள் வென்றிருக்கலாம் என அதிமுக தலைவர்கள் இப்போது சொல்கின்றனர். நாங்களும் சொல்கிறோம். 2026ல் என்ன கூட்டணி என்பதை இப்போது என்னால் கூற முடியாது. எவ்வளவு கிண்டல் செய்தாலும் தமிழ்நாட்டில் தாமரை மலரத்தான் செய்யும். அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி நான் கருத்து கூற முடியாது. அண்ணாமலை பேசியது அவருடைய கருத்து, அதுபற்றி அவரிடமே ஊடகங்கள் கேட்கலாம். மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அயல்நாட்டு சக்திகள் பணியாற்றியுள்ளன.

பாஜக ஐடி விங் மற்றும் வார் ரூம் இளைஞர்கள் கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கின்றேன். ஆளுநர் பணியை விட்டு விட்டு வந்ததற்கு நானே கவலைப்படவில்லை. உங்களுக்கு என்ன கவலை?” என்றார்.