சவுக்கு சங்கர் பேசியது தவறுதான் அதற்காக நடவடிக்கை கூடாது - தமிழிசை

 
tamilisai

சவுக்கு சங்கர் பேசியது தவறுதான். ஆனால் பழிவாங்குவதற்காக நடவடிக்கை எடுக்கக்கூடாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, “நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணத்தில் 8 நாட்களாக துப்பு துலங்கவில்லை. ஆனால் சவுக்கு சங்கரை மட்டும் கைது செய்தது எப்படி? சவுக்கு சங்கர் பேசியது தவறுதான். ஆனால் பழிவாங்குவதற்காக நடவடிக்கை எடுக்கக்கூடாது. கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யும்போது கஞ்சா கடத்தல்காரரை வைத்திருந்தவர்களை என்ன செய்வது?

பிரதமர் மோடி தமிழர்களுக்கு அங்கீகாரம் அளித்ததற்கு, விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது கொடுத்ததே சான்று.  சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க திமுக ஆட்சியில் எதுவும் இல்லை. இந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சி செயலற்ற ஆட்சி மட்டுமே. பிரதமர் மோடி ஊழலில்லாத ஆட்சியை அளித்துள்ளார். ஆகவே 3-வது முறையாக அவர் பிரதமராவார்” என்றார்.