தம்பி விஜய்க்கு நன்றி...! தமிழிசை சௌந்தரராஜன் உருக்கம்!

 
Tamilisai Tamilisai

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு தமிழிசை சவுந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மரியாதைக்குரிய தமிழக வெற்றி கழகத்தின் தலைவர்.. தம்பி விஜய் அவர்களுக்கு.. தாங்கள் பதிவு செய்திருக்கின்ற இரங்கல் செய்தி. . எங்களுக்கு மன  ஆறுதலை தருவதோடு.. என் தந்தையின் வாழ்க்கைக்கு பெருமை சேர்க்கும் அளவிற்கு கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறீர்கள்  இரங்கல் செய்தி சொன்னதோடு. . தங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் சகோதரர் ஆனந்த் அவர்களை நேரில் அனுப்பி... எங்களோடு தங்கள் துக்கத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... கட்சி, கொள்கைகள் கடந்து தாங்கள் காட்டும் அன்பிற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.