இவரெல்லாம் அரசியலில் இருப்பதற்கே தகுதியற்றவர் - தமிழிசை சவுந்தரராஜன்..!!

 
Q

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது முறைப்படியான புகார் ஒன்றை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

இப்பொழுது ஆட்சியரிடம் இருந்து புகார் வந்திருக்கிறது என்ற செய்தி வந்திருக்கிறது. குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று சொன்ன சட்டமன்ற உறுப்பினர் என்ன சொல்லப் போகிறார் அமைச்சர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்; ஏன் கூட்டணிக்கு பரிந்து பேசிய மாணிக் தாக்கூர் என்ன சொல்ல போகிறார்?. பொய் சொல்வதை எவ்வளவு துணிச்சலாக சொல்கிறார்கள்?.

மறுபடியும் சொல்கிறோம் பெண்களைப் பாதுகாப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த முதல்-அமைச்சர் விஜய் இப்பொழுதாவது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். பதவியில் இருக்கும் பெண்களே இப்படி பரிதவிக்க வேண்டி இருக்கிறது என்றால் சாமானிய பெண்களுக்கு உதவி செய்ய இந்த அரசு எப்படி முன் வரும்?.

தாமாக புகார் அளிப்பது கூட தாமதமாகத்தான் முடிகிறது என்றால் தமிழ்நாட்டின் தங்கைகளின் நிலை என்ன?... தவறு நிரூபிக்கப்பட்டால் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் அரசியலில் இருப்பதற்கே தகுதியற்றவர் ஆகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.