பசுமை பட்டாசுளை வெடித்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ வேண்டும்- தமிழிசை

 
தமிழிசை

இந்திய மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த “தீபாவளி“ திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

கர்ப்பிணிப் பெண்கள் ராமாயணம் படிக்க வேண்டும்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை  அறிவுரை | Pregnant women should chant Sunderkand, read Ramayana, says  Telangana governor Tamilisai Soundararajan ...

இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன், “தீபாவளி திருநாள் நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வையும் சகோரத்துவத்தையும் பலப்படுத்துகிறது. சாதி மத பேதங்களைக் கடந்து கொண்டாடப்படும் இந்த தீபாவளித் திருநாள் அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவர வாழ்த்துகிறேன். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் 'சுய சார்பு இந்தியா' கொள்கையைப் பின்பற்றி தீபாவளியைக் கொண்டாடுவோம். இந்திய கலைஞர்கள் உற்பத்தி செய்த பரிசு பொருட்களை வாங்கி பிறருக்குக் கொடுத்து, நம் நாட்டு நெசவாளர்கள் தயாரித்த உடைகளை உடுத்தி தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம். இந்த தீபாவளி கொண்டாட்டம் பாரத தேசத்தை பொருளாதார ரீதியில் உயர்த்துவதாக இருக்கட்டும்.  

மக்கள் அனைவரும் பாதுகாப்பாக, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் பசுமை பட்டாசுளை வெடித்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழ வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி திருநாள்  நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.