பவதாரணி உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன் - தமிழிசை இரங்கல்!
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி உடல் நலக்குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன் என தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல்செய்தியில், இசையமைப்பாளர் திரு.இளையராஜா அவர்கள் மகளும்,பிரபல பின்னணி பாடகியுமான பவதாரணி அவர்கள் உடல் நலக்குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன்.
இசையமைப்பாளர் திரு.இளையராஜா அவர்கள் மகளும்,பிரபல பின்னணி பாடகியுமான பவதாரணி அவர்கள் உடல் நலக்குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மன வேதனைை அடைந்தேன்.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) January 25, 2024
தனது இனிமையான குரல் வளத்தால் பல இசை ரசிகர்களை கவர்ந்து தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்று இசை ரசிகர்கள் மனதில் நீங்கா… pic.twitter.com/FsA1qPyVE9
தனது இனிமையான குரல் வளத்தால் பல இசை ரசிகர்களை கவர்ந்து தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்று இசை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவரின் இழப்பு இசைத்துறைக்கு பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் இசையமைப்பாளர் திரு.இளையராஜா அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிப்பதோடு சகோதரி பவதாரணியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.