டாக்டர் பத்ரிநாத் மறைவு - தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல்

 
Tamilisai

மருத்துவர் பத்ரிநாத் மறைவிற்கு தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர்.எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.பல லட்சம் விழிகளுக்கு  ஒளி தந்தோடு, எண்ணற்ற ஏழை,எளிய‌‌ மக்களுக்கு
தரமான கண் மருத்துவ சிகிச்சை‌ இலவசமாக வழங்கியவர்.பல ஆயிரக்கணக்கான கண் சிகிச்சை  நிபுணர்களை உருவாக்கிய சாதனையாளர்.


டாக்டர்.எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்கள் மறைவு மருத்துவ உலகிற்கு பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும் சங்கர நேத்ராலயா குழும நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும்,ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.