சௌமியா அன்புமணி கைது செய்யப்பட்டதற்கு தமிழிசை கண்டனம்!

 
Tamilisai

அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கண்டித்து போராட முயன்றதற்காக பாமகவை சேர்ந்த சௌமியா அன்புமணியை காவல்துறை கைது செய்தது கண்டனத்திற்குரியது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்  அவர்கள் தலைமையிலான அரசு அண்ணா பல்கலைக்கழகத்தில்  பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டி போராட பெண் தலைவர்களுக்கு கூட அனுமதி மறுப்பது தொடர்ந்து நடைபெறுவது கண்டனத்திற்குரியது. இன்று  தனது கண்டனத்தை தெரிவிக்க வந்த பாமகவைச் சார்ந்த சகோதரி திருமதி.சௌமியா அன்புமணி அவர்கள் போராட்டக் குரல் எழுப்புவதற்கு முன்பே கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.

தொடர் கைதுகள் உண்மையை மூடி மறைத்து விட முடியாது... போராட்டங்களை அடக்கு முறையால் முடிவுக்கும் கொண்டு வர முடியாது... திராவிட மாடல் ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டு வருகிறது. ஆம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத அரசு முடிவுக்கு வரும்  முடிவுரை எழுதப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.