பெரும் பரபரப்பு! தமிழிசை செளந்தரராஜன் கைது

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் அனுமதியின்றி கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு திரட்டிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கையை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் மும்மொழி கல்வி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதனிடையே மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்க முடியும் என மத்திய அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. இதனிடையே மும்மொழி கொள்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கையெழுத்து இயக்கத்தை நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், சென்னை எம்.ஜி.ஆர். நகரில் அனுமதியின்றி கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு திரட்டிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரை கண்டித்து பாஜகவினர் கண்டன கோஷம் எழுப்பினர். போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் கையெழுத்து இயக்கம் நடத்த காவல்துறை அறிவுறுத்தினர். அனுமதி பெற்று தான் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது என காவல் துறையிடம் தமிழிசை வாக்குவாதம் செய்தார்.