குற்றவாளிகளுக்கு ஊர்வலம் நடத்த அனுமதி...அதை தட்டி கேட்டால் கைது - தமிழிசை கண்டனம்
கோவையில் பேரணி நடத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றவாளிகளுக்கு ஊர்வலம் நடத்த அனுமதி...அதை தட்டிக் கேட்டால் கைது.. தமிழக அரசின் இந்த போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்... கோவையில் அமைதியான முறையில்... கண்டனத்தை தெரிவித்த பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களையும் மற்ற நிர்வாகிகளையும் கலந்து கொண்ட சகோதர இயக்கத்தைச் சார்ந்தவர்களையும் கைது செய்திருப்பது தமிழக அரசின் அராஜகப் போக்கை காண்பிக்கிறது...
குற்றவாளிகளுடன் கைகுலுக்குவது நேர்மையாளர்களை கைது செய்வது இதுதான் தமிழக அரசின் நியாயமற்ற நீதியற்ற நடைமுறை.. வன்முறையாளர்களுக்கு ஆதரவு நன்முறையாளர்களுக்கு அனுமதி மறுப்பு என்ற தமிழக அரசின் மாற்றான் தாய் மனப்பான்மையை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்...தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு திருந்த வேண்டும் இல்லையென்றால் மக்கள் திருத்துவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.