வீடு வீடாய் வரும் திமுகவினரிடம் இந்த 3 கேள்விகளை கேளுங்கள்- தமிழிசை
ஓரணியில் தமிழ் நாடாம்... திராவிட மாடல்.. உறுப்பினர் சேர்க்க வருவார்களாம் வீடு வீடாய் வருவார்களாம்... அவர்களிடம் இந்த மூன்று அடிப்படைக் கேள்விகளை கேளுங்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்ததரராஜன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழிசை செளந்ததரராஜன் தனது எக்ஸ் தளத்தில், “ஓரணியில் தமிழ் நாடாம்... திராவிட மாடல்.. உறுப்பினர் சேர்க்க வருவார்களாம வீடு வீடாய் வருவார்களாம் வீட்டில் உள்ளவர்கள் கேட்க வேண்டிய மூன்று கேள்விகள் அம்மா கேட்க வேண்டியது. கேஸ்சுக்கு நூறு ரூபாய் மானியம் தருவேன் என்றீர்களே தந்தீர்களா? தம்பி கேட்க வேண்டியது கல்வி கடனை ரத்து செய்வோம் என்று சொன்னீர்களே செய்தீர்களா? ஐயா கேட்க வேண்டியது மாதம் மாதம் கரண்ட் ரீடிங் எடுப்பேன் என்று சொன்னீர்களே செஞ்சீர்களா? இன்னும் பல கேள்விகள் இருந்தாலும் இந்த மூன்று அடிப்படைக் கேள்விகளை கேளுங்கள்... அவர்களிடமிருந்து இல்லை என்று தான் பதில் வரும் அப்படி என்றால் மக்கள் சொல்வது வாக்குகளும் இல்லை உறுப்பினரும் இல்லை என்பதுதான் ஆக ஒட்டுமொத்தமாக திராவிட மாடலுக்கு "எதிரணியில் தமிழ்நாடு" "ஓர் அணியில் தமிழ்நாடு "அவர்கள் சொல்வது அவர்களின் "எதிரணியில் தமிழ்நாடு" மக்கள் சொல்வது....” எனக் குறிப்பிட்டுள்ளார்.


