தமிழக வெற்றிக் கழகம் பதிவு - தேர்தல் ஆணையம் ஏற்பு
Jun 8, 2024, 13:36 IST1717834001358

தமிழக வெற்றிக் கழகத்தை தேர்தல் ஆணையம் மாநிலக் கட்சியாக பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை ஏற்றது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். கட்சியின் பெயர், தலைமை நிர்வாகிகள் பெயர் பட்டியலை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்தார். ஆட்சேபனை இருந்தால் தேர்தல் ஆணையத்திடம் 30 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை மாநிலக் கட்சியாக பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை ஏற்றது தேர்தல் ஆணையம். ஆட்சேபங்கள் வராத பட்சத்தில் இம்மாத இறுதிக்குள் மாநிலக் கட்சியாக பதிவு செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.