தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்- ஆளுநர் மாளிகை நடவடிக்கை

 
f

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஏற்பட்ட தவறுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஆளுநர் மாளிகை வலியுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ்த்தாய் வாழ்த்தில் விடுபட்ட’திராவிட நல்திருநாடு’... ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சர்ச்சை

சென்னை டிடி தமிழ் டிவியில் நடைபெற்றுவரும் இந்தி மாத கொண்டாட்ட விழாவின்போது தமிழ்த் தாய் அவமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற அந்த விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்தில், "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்" என்ற வரியை விடுத்து பாடப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது "திராவிடநல் திருநாடும்" என்ற வரியை தவிர்த்து உள்ளார் ஆளுநர். 

இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆளுநரை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரி்வித்து இருந்தார். இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஏற்பட்ட தவறுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஆளுநர் மாளிகை வலியுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஆளுநர் நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து பாடலில் திராவிட நல் திருநாடு வரியினை பாட தவறிய 3 பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, டிடி தொலைகாட்சி அலுவலகத்திற்கு ஆளுநர் மாளிகை அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.