"தமிழ் கட்டாய மொழி பாடமாக இருக்க வேண்டும்" - தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு!

 
school

அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ், கட்டாய மொழி பாடமாக இருக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

school

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலலும், 10ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்ற சட்டம் அமலில் உள்ள நிலையில்  2015 - 16ஆம் ஆண்டில், அனைத்து வகை பள்ளிகளிலும், ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயப் பாடமானது. அதற்கு அடுத்த கல்வியாண்டுகளில் ஒவ்வொரு வகுப்பாக படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த ஆண்டு 8ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் அமலானது. இந்நிலையில் 2023 - 24ஆம் கல்வியாண்டில், ஒன்பதாம் வகுப்பு வரையிலும், 2024 - 2025ஆம் ஆண்டில், 10-ம் வகுப்பு வரையிலும் தமிழ் கட்டாயமாகிறது.

school

இந்நிலையில் அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் கட்டாய மொழி படமாக இருக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 2024-25க்குள் அனைத்து தனியார் பள்ளிகளும் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.  அனைத்து பள்ளிகளிலும்  தகுதியான ஆசிரியர்களால் தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு தமிழ் மொழியை திறன் பட கற்பிக்க தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஒன்பது முதல் 12 ஆம் வகுப்புகளில் கட்டாயமாக கூடுதல் மொழியாக தமிழ் கற்பிக்கப்பட வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் துறை இயக்குநர் நாகராஜ முருகன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.