மே 4 தமிழ்நாடு வெல்லும்! -முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு..!
Apr 24, 2026, 05:20 IST1776988219000
தமிழகத்தில் நிகழ்ந்த சாதனை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர், 2026 தமிழக சட்டமன்ற தேர்தல், ஜனநாயகத் திருவிழா: சாதனை வாக்குப்பதிவு; பாராட்டுக்குரிய மக்களின் பொறுப்புணர்வு!
- எப்போதும் போல பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது தமிழ்நாடு தேர்தல்.
- 84.69% என்ற சாதனை அளவில் வாக்களித்து, ஜனநாயகத்தைப் பாதுகாத்திடும் கடமையைத் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் சரிவர ஆற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
- சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் நீண்ட தூரம் பயணித்து வந்து வாக்களித்து விட்டு, இன்றிரவே மீண்டும் கிளம்பி, அவரவர் பணியாற்றும் ஊர்களுக்குச் செல்கின்றனர்.
- "ஒரு வாக்குதானே" என எண்ணாமல், "ஒரு தலைமுறைக்கான தேர்தல் இது" என்ற நினைப்பே இந்த உந்துதலுக்குக் காரணமாக இருக்க முடியும். அத்தகைய பொறுப்புள்ள குடிமக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
- தமிழ்நாடு வாக்களித்துவிட்டது, மே 4 தமிழ்நாடு வெல்லும்! இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்கு பதிவு இயந்திரங்களை சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்றுள்ளனர். மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையானது நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
#TNElections2026 ஜனநாயகத் திருவிழா: சாதனை வாக்குப்பதிவு; பாராட்டுக்குரிய மக்களின் பொறுப்புணர்வு!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 23, 2026
🗳️ எப்போதும் போல பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது தமிழ்நாடு தேர்தல்.
🗳️ 84.69% என்ற சாதனை அளவில் வாக்களித்து, ஜனநாயகத்தைப் பாதுகாத்திடும்… pic.twitter.com/q4rS5PuUDU

