மேகதாது அணையால் தமிழகத்திற்குத்தான் லாபம் - மத்திய அமைச்சர் குமாரசாமி புது விளக்கம்..!!

 
Q

மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி அளித்த பேட்டி:

தேவகவுடா பிரதமராகும் வரை, கர்நாடகாவில் அணைகள் கட்டுவதற்கு மத்திய அரசு ஒரு பைசா கூட நிதி வழங்கவில்லை. மேகதாதில் அணை கட்டுவதற்கு, மத சார்பற்ற ஜனதாதளம் சார்பில் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

மேகதாதில் அணை கட்டுவதற்கு தமிழகம் ஒத்துழைக்க வேண்டும். இந்த அணை கட்டுவதால் தமிழகத்திற்கு நன்மையே. இதை, தமிழகத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்கள் கவுரவத்திற்காக, கர்நாடகாவின் நலன்களை ஒடுக்கக்கூடாது. காவிரி நீர் பிரச்னை 50 ஆண்டுகளாக இருந்து வருகிறது. தமிழகம் எதிர்பார்ப்பதை விட இரு மடங்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. மழை இல்லாமல் அணைகளில் நீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் காலத்தில், நீரை திறந்து விட அழுத்தம் கொடுப் பது சரியானதல்ல.

நீர் விவகாரத்தில் மோதலில் ஈடுபடுவது, நல்லதல்ல.

இவ்வாறு பேசினார்.