ஜூன் 18 ம் தேதி கூடுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம்!!

 
vijay

 தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் வரும் ஜூன் 18ம் தேதி சென்னை பனையூரில் நடைபெற உள்ளது.

vijay

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கி அதன் செயல்பாடுகளை கவனித்து வருகிறார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில்  வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் களம் காண்போம் என்று அறிவித்துள்ளார். 

vijay
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் வரும் ஜூன் 18ம் தேதி சென்னை பனையூரில் நடைபெற உள்ளது. விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்தும், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்தும், பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.