திமுக ஆட்சியில் ’டான்’... இப்ப டம்மி? உதயச்சந்திரன் ஐஏஎஸ் இடமிருந்து பிடுங்கப்பட்ட பதவி!
தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஆணையர் ஜெயசீலன் ஐஏஎஸ் தொல்லியல் துறை இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை இயக்குநர் ஜெயசீலன், தொல்லியல்துறை இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உதயசந்திரன் IAS கூடுதல் பொறுப்பாக வகித்து வந்த தொல்லியல் துறையின் இயக்குனர் பதவி தற்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இயக்குனர் ஜெயசீலனிடம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொல்லியல் துறைக்குப் புதிய அடையாளத்தை வழங்கியவர் உதயச்சந்திரன் IAS. ஆனால் இன்று அவரிடமிருந்து பதவி பறிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் மிக பவர் ஃபுல்லாக இருந்தவர் உதயச்சந்திரன். ஸ்டாலினின் முதன்மைச் செயலாளராக பணியாற்றிய இவர், நிதித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். திமுக ஆட்சியில் முக்கிய பதவிகளில் உதயச்சந்திரனின் நட்பு வளையத்தில் இருந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டார்கள். திறமையான அதிகாரிகள் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது.

