ஜார்க்கண்ட் மருத்துவக் கல்லூரியில் நாமக்கல் மாணவர் எரித்து கொலை
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஆர்.ஐ.எம்.எஸ் மருத்துவக் கல்லூரியில் தமிழக மாணவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் வேலக்கவுண்டம் பட்டியை சேர்ந்தவர் மதன்குமார். தமிழகத்தை சேர்ந்த இவர், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஆர்.ஐ.எம்.எஸ். மருத்துவ அறிவியல் கழகத்தில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் திடீரென்று காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாதி எரிந்த நிலையில் மாணவர் மதன் குமார் உடல் கல்லூரி விடுதி வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் நாமக்கல் மாவட்டம் வேலக்கவுண்டன்பட்டியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் மதியழகன் என்பவரது மகன் என்பது தெரியவந்துள்ளது. தகவல் அறிந்ததும் மதன்குமாரின் பெற்றோர் ராஞ்சிக்கு விரைந்துள்ளனர்.
மதன்குமார் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது யாரேனும் கொன்று வனப்பகுதியில் எரித்துவிட்டனாரா என போலீசார் தெரிவிக்கின்றனர்.