சென்னையில் நாளை மறுநாள் தமாக மாநில செயற்குழு கூட்டம் கூடுகிறது!!

 
gk vasan

நாளை மறுநாள் 12.02.2024 திங்கட்கிழமை அன்று தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.

gk

நாளை மறுநாள் 12.02.2024 திங்கட்கிழமை அன்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) மாநில செயற்குழு கூட்டம் சென்னை, எழும்பூர், ஹோட்டல் அசோகாவில் நடைபெறுகிறது. நான் கலந்து கொள்ளும் இக்கூட்டத்தில் த.மா.கா வின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில துணை அமைப்பு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

gk

நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி சம்பந்தமாகவும், மாவட்ட வாரியாக கட்சியின் பலம், தேர்தல் பணி, வெற்றி யூகம் போன்ற பல கருத்துகள் பற்றியும் இக்கூட்டத்தில் கேட்கப்பட்டு, ஆலோசனை செய்யப்படும். எனவே த.மா.கா வின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், கருத்துகள், ஆலோசனைகள் குறித்து அன்றைய தினம் கட்சியினருக்கும், பொது மக்களுக்கும் தெரிவிக்கப்படும் என்பதை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.