தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.63,200 வரை சம்பளம்..!

 
1 1

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள 09 அலுவலக உதவியாளர் (Office Assistant), ஓட்டுநர் (Driver) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 02.01.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

Description Details
வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலை 2026
அறிவிப்பு வெளியிட்ட துறை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
காலியிடங்கள் 09
பணிகள் அலுவலக உதவியாளர் (Office Assistant), ஓட்டுநர் (Driver)
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம்
கடைசி தேதி 02.01.2026
பணியிடம் Chennai 
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.tnsec.tn.gov.in/

காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வேலைவாய்ப்பு 2026, பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது:

பணியின் பெயர் காலியிடங்கள்
அலுவலக உதவியாளர் (Office Assistant)           07
ஓட்டுநர் (Driver)           02

கல்வித் தகுதி

பணியின் பெயர் கல்வித் தகுதி மற்றும் கூடுதல் தகுதிகள்
அலுவலக உதவியாளர் (Office Assistant) 1. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. மிதிவண்டி (Bicycle) ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
3. நகல் எடுக்கும் இயந்திரம் (Xerox) மற்றும் பிரிண்டர் இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
ஓட்டுநர் (Driver) 1. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. 1988-க்கு முன் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
3. வாகன இயந்திர நுணுக்கங்கள் மற்றும் முதலுதவி (First Aid) பற்றிய அறிவு கட்டாயம்.

வரம்பு விவரங்கள் :

TNSEC வயது வரம்பு விவரங்கள்:

  • பொதுப் பிரிவு (GT): 18 முதல் 32 ஆண்டுகள் வரை.
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC / BCM): 18 முதல் 34 ஆண்டுகள் வரை.
  • மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC / DNC): 18 முதல் 34 ஆண்டுகள் வரை.
  • ஆதிதிராவிடர் (SC / SCA) மற்றும் பழங்குடியினர் (ST): 18 முதல் 37 ஆண்டுகள் வரை.
  • ஆதரவற்ற விதவைகள் (அனைத்து பிரிவும்): 18 முதல் 37 ஆண்டுகள் வரை.
  • மாற்றுத்திறனாளிகள்: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்; அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
  • முன்னாள் ராணுவத்தினர் (பொதுப் பிரிவு): அதிகபட்சம் 50 ஆண்டுகள் வரை.
  • முன்னாள் ராணுவத்தினர் (BC / MBC / SC / ST பிரிவினர்): அதிகபட்சம் 55 ஆண்டுகள் வரை.

சம்பள விவரங்கள் :

பணியின் பெயர் ஊதிய விகிதம் (மாதம்)
அலுவலக உதவியாளர் (Office Assistant) ரூ. 15,700 – 50,000/- (நிலை 1)
ஓட்டுநர் (Driver) ரூ. 19,500 – 62,000/- (நிலை 1)

தேர்வு செயல்முறை

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரர்கள் பின்வரும் இரண்டு நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  • விண்ணப்பங்கள் பரிசீலனை: தகுதியான விண்ணப்பதாரர்கள் முதலில் சுருக்கப் பட்டியல் (Shortlisting) செய்யப்படுவார்கள்.
  • நேர்காணல்: தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நேர்காணல் (Interview) நடைபெறும்.
  • தகவல் பரிமாற்றம்: நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு விரைவு அஞ்சல் (Speed Post) அல்லது மின்னஞ்சல் (Email) வழியாக அனுப்பப்படும்.

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 18.12.2025
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.01.2026 (மாலை 5:00 மணி வரை)

எப்படி விண்ணப்பிப்பது:

  • விண்ணப்பப் படிவம்: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://tnsec.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து மாதிரி விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • இணைக்கப்பட வேண்டியவை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பின்வரும் சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட (Self-attested) நகல்களை இணைக்க வேண்டும்:
    • கல்வித் தகுதி சான்றிதழ்கள்.
    • சாதிச் சான்றிதழ்.
    • முன்னுரிமைச் சான்றிதழ்கள் (இருப்பின்).
  • அஞ்சல் உறை: ரூ.30/- அஞ்சல் வில்லை (Postage Stamp) ஒட்டப்பட்ட, சுய முகவரி எழுதப்பட்ட ஒரு அஞ்சல் உறை (அளவு 10 x 4 அங்குலம்) விண்ணப்பத்துடன் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: “The Chief Administrative Officer,Tamil Nadu State Election Commission,No. 208/2, Jawaharlal Nehru Road,Arumbakkam, Chennai – 600 106.”