"கள்ளச்சாராயம் ஒழிக்க தொடர் நடவடிக்கை தேவை" - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்!!

 
kamal

கள்ளச்சாராயம் அற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. 

 

ttn


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியதில் 60க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.  அத்துடன் நேற்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று நலம் விசாரித்த அவர் , கள்ளசாராயத்தை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

tn

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில், "விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு  இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துவிட்டு எளிதாக கடந்து போகக்கூடிய ஒன்றல்ல. 

ttn

இதுபோன்ற  கோரசம்பவங்கள் நடந்தவுடன், தீவிர நடவடிக்கை எடுப்பதும், பின் அலட்சியமாக இருப்பதும் பலநேரங்களில் நடந்திருப்பதை நாம் அறிவோம்.  இப்போது அப்படியில்லாமல் தமிழ்நாடு காவல்துறை,   கள்ளச்சாராயம்  தயாரிப்போர், விற்பனை செய்வோர், விற்பனைக்குத் துணைபோவோர் உள்ளிட்ட அனைவர்மீதும் எடுக்கும் நடவடிக்கை தொடர்ந்து தொய்வில்லாமல் நடக்க வேண்டும் கள்ளச்சாராயம் அற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டுமென  மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது." என்று பதிவிட்டுள்ளார்.