தமிழக விடுதிகளின் உணவுத் தரம் உயருகிறது: உரிமம் பெறாத சமையல் கூடங்கள் செயல்பட தடை!

 
1 1

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் விடுதிகளில் உள்ள சமையல் கூடங்கள், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும் என, தமிழக உணவு பாதுகாப்பு துறை தெரிவித்து உள்ளது.

மேலும் அங்கு சமையல் பணியில் ஈடுபட்டிருப்போர் 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு அதற்கான சான்றுகளை வைத்திருத்தல் அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிகளை பின்பற்றத் தவறும் விடுதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விடுதிகளில் தயாரிக்கப்படும் உணவின் தரம் குறித்து அதிக அளவில் புகார்கள் எழுத்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 


இதுகுறித்து, அதன் அதிகாரிகள் கூறியதாவது:

சில விடுதிகளில் உள்ள சமையல் கூடங்களில் தயாரித்த சாப்பாட்டை சாப்பிட்டு, அங்கு இருக்கும் மாணவர்கள், உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதை தவிர்க்க, அவ்வப்போது உணவு விதிகளில் உள்ள சமையல் கூடங்களை ஆய்வு செய்ய, மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அப்போது, பதிவு உரிமம் பெறாத சமையல் கூடங்களை கணக்கெடுக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.