யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாடு அளவில் முதல் இடம் பிடித்த மாணவிக்கு முதல்வர் வாழ்த்து!!

 
stalin

UPSC தேர்வில் தமிழ்நாடு அளவில் முதல் இடம் பிடித்த மாணவி ஏ.எஸ்.ஜீ ஜீ க்கு  முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

ஐஏஎஸ்,  ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது . ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் தேர்வில் முதல் நிலை , முதன்மை,  நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் உள்ளன.  933 காலி இடங்களுக்கான 2022 ஆம் ஆண்டுக்கான முதல் நிலை தேர்வு கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்றது . இந்த சூழலில் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டது.   தேர்வு முடிவுகளில் முதல் 4 இடங்களையும் பெண்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.  குறிப்பாக அகில இந்திய அளவில் முதல் இடத்தை இஷிதா கிஷோர் என்பவர் பிடித்துள்ளார்.

UPSC தேர்வில் தமிழ்நாடு அளவில் முதல் இடம் பிடித்த மாணவிக்கு, அமைச்சர் சேகர் பாபு வாழ்த்து

 தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 39 பேர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இதில் சென்னை பெரம்பூரை சேர்ந்த ஜீஜீ,  தேசிய அளவில் 107வது இடத்தை பிடித்துள்ள நிலையில் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.    UPSC தேர்வில் தமிழ்நாடு அளவில் முதல் இடம் பிடித்த மாணவியை, அமைச்சர் சேகர் பாபு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.


இதுக்குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "நேற்று வெளியான #UPSCResults-இல் கொளத்தூரைச் சேர்ந்த ஏ.எஸ்.ஜீ ஜீ அவர்கள் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

கடந்த ஆண்டைவிட அதிகமான அளவில் தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள் குடிமைப் பணிக்குத் தேர்வாகியுள்ளது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது.

தேர்வு பெறாதவர்கள் துவண்டு போகாமல் தொடர்ந்து முயலுங்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இருந்து UPSC தேர்வில் வெற்றி பெறுவோர் எண்ணிக்கை உயர வேண்டுமெனத் தமிழ்நாடு அரசு பல இலவசப் பயிற்சித் திட்டங்களை அறிவித்துள்ளது. அவற்றை அனைவரும் பயன்படுத்தி வெற்றிகண்டு நம் மாநிலத்திற்குப் பெருமை சேர்ப்பீர்!" என்று பதிவிட்டுள்ளார்.