தமிழ்நாடு, புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது...

 
பொதுத்தேர்வு

தமிழ்நாடு, புதுச்சேரியில்  12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது.  

தமிழ்நாடு, புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தற்போது தொடங்கியது.   பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்.  இதில் பள்ளி மாணவர்கள் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303  பேரும்,  தனித்தேர்வர்களாக 23 ஆயிரத்து  747 பேர் பங்கேற்கின்றனர். இவர்களில், 4 லட்சத்து 3,156 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 33,436 பேர் மாணவியர் ,  3ம் பாலினத்தவர் ஒருவர் ஆவர்.  தேர்வு எழுதுவோரில் மாற்றுத்  திறனாளிகள் 5,206 மற்றும்  சிறைவாசிகள் 90 பேரும் உள்ளனர். இதற்காக  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3,225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு, புதுச்சேரியில்  12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது...

இதற்காக மாநிலம் முழுவதும்  3,225 மையங்கள் அமைக்கப்பட்டு,  அறை கண்காணிப்பாளர்களாக 90 ஆயிரத்து 70 பேரும், பறக்கும் படை உறுப்பினர்களாக 3 ஆயிரத்து 100 பேரும், நிலையான படை உறுப்பினர்களாக 2 ஆயிரத்து 269 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  காலை 10 மணிக்கு தொடங்கியுள்ள தேர்வானது மதியம் 1.15 மணி வரை நடைபெற உள்ளது. இதில் முதல் 15 நிமிடங்கள் விவரங்களை சரிபார்ப்பதற்கும்,  வினாத்தாள் வாசிக்கவும்  வழக்கப்படும்.  அதற்கு பிறகு விடை எழுத  அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு மையங்களில் செல்போன், கணினி எடுத்து செல்ல  தடை விதிக்கப்பட்டுள்ளது.