தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2026 – 2,118 காலியிடங்கள் – ₹29,380 சம்பளம் | தேர்வு கிடையாது..!

 
1

தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் GDS வேலைவாய்ப்பு 2026-க்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள், அதிகாரப்பூர்வ India Post GDS Online Engagement Portal மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பம் 02.09.2026 முதல் 21.09.2026 மாலை 5.00 மணி வரை சமர்ப்பிக்கலாம்.

TN Post Office GDS Recruitment 2026 – முக்கிய தகவல்கள்

விவரம் தகவல்கள்
வேலை பிரிவு மத்திய அரசு வேலை 2026
அமைப்பு இந்திய அஞ்சல் துறை – India Post
தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ்
ஆட்சேர்ப்பு Gramin Dak Sevak (GDS) Online Engagement
அறிவிக்கை எண்: 17-12/2026-GDS dated 20th, August ,2026  
மொத்த காலியிடங்கள் 2,118
பணிகள் கிராம அஞ்சல் பணியாளர் (Gramin Dak Sevak – GDS),
கிளை அஞ்சல் அதிகாரி (Branch Postmaster – BPM),
உதவி கிளை அஞ்சல் அதிகாரி (Assistant Branch Postmaster – ABPM) மற்றும் அஞ்சல் பணியாளர் (Dak Sevak)
கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி
குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது 40 ஆண்டுகள்
BPM ஊதியம் ₹12,000 – ₹29,380
ABPM/Dak Sevak ஊதியம் ₹10,000 – ₹24,470
தேர்வு முறை Merit List + Certificate Verification
விண்ணப்ப முறை ஆன்லைன்
வின்னப்பிக்க தொடக்க தேதி 02.09.2026
வின்னப்பிக்க கடைசி தேதி 21.09.2026, மாலை 5.00 மணி
Correction Window 23.09.2026 – 24.09.2026, மாலை 5.00 மணி
பணியிடம் தமிழ்நாடு அஞ்சல் வட்டம்
அதிகாரப்பூர்வ இணையதளம் indiapost.gov.in/gdsonlineengagement

 2026 காலிப்பணியிடங்கள்

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன

இந்த ஆட்சேர்ப்பில் Gramin Dak Sevaks (GDS) பணிகளின் கீழ் Branch Postmaster, Assistant Branch Postmaster மற்றும் Dak Sevak பணிகள் இடம்பெறுகின்றன. விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான Division மற்றும் Post Office விவரங்களை அதிகாரப்பூர்வ GDS portal-ல் சரிபார்த்து, தங்களுடைய தகுதி மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப பணியிடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்..

  • Gramin Dak Sevaks (GDS) – 2,118 காலியிடங்கள்

அஞ்சல் கோட்டம் / பிரிவு காலிப்பணியிடங்கள் (Posts)
அரக்கோணம் (Arakkonam) 34
செங்கல்பட்டு (Chengalpattu) 68
சென்னை நகர மத்திய (Chennai City Central) 01
சென்னை நகர வடக்கு (Chennai City North) 02
சென்னை நகர தெற்கு (Chennai City South) 11
சென்னை நகர Sorting Division 02
கோயம்புத்தூர் (Coimbatore) 41
கடலூர் (Cuddalore) 57
தர்மபுரி (Dharmapuri) 48
திண்டுக்கல் (Dindigul) 77
ஈரோடு (Erode) 83
காஞ்சிபுரம் (Kanchipuram) 51
கன்னியாகுமரி (Kanniyakumari) 30
கரூர் (Karur) 45
கோவில்பட்டி (Kovilpatti) 58
கிருஷ்ணகிரி (Krishnagiri) 63
கும்பகோணம் (Kumbakonam) 42
மதுரை (Madurai) 54
மயிலாடுதுறை (Mayiladuthurai) 34
நாகப்பட்டினம் (Nagapattinam) 35
நாமக்கல் (Namakkal) 71
நீலகிரி (Nilgiri) 35
பட்டுக்கோட்டை (Pattukottai) 52
பொள்ளாச்சி (Pollachi) 34
புதுச்சேரி (Pondicherry) 76
புதுக்கோட்டை (Pudukkottai) 47
இராமநாதபுரம் (Ramanathapuram) 60
RMS CB Division 07
RMS MA Division 06
RMS T Division 02
சேலம் கிழக்கு (Salem East) 42
சேலம் மேற்கு (Salem West) 46
சிவகங்கை (Sivaganga) 32
ஸ்ரீரங்கம் (Srirangam) 40
தாம்பரம் (Tambaram) 60
தஞ்சாவூர் (Thanjavur) 54
தேனி (Theni) 60
திருச்சி (Trichy) 74
திருநெல்வேலி (Tirunelveli) 50
திருப்பத்தூர் (Tirupattur) 49
திருப்பூர் (Tirupur) 85
திருவண்ணாமலை (Tiruvannamalai) 108
தூத்துக்குடி (Tuticorin) 37
வேலூர் (Vellore) 29
விருதுநகர் (Virudhunagar) 44
விருத்தாசலம் (Vriddhachalam) 59
தமிழ்நாடு அஞ்சல் வட்டம் – மொத்த காலியிடங்கள் 2,118

Reservation Wise Vacancy Details/இடஒதுக்கீடு வாரியான காலிப்பணியிட விவரங்கள்

Category No. of Vacancies
UR (General) 921
OBC 524
SC 385
ST 18
EWS 203
PwD-A 13
PwD-B 23
PwD-C 23
PwD-DE 08
Total 2,118

கல்வித் தகுதி

தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2026 Gramin Dak Sevaks (GDS) பணிகளுக்கான கல்வித் தகுதி விவரங்கள் கீழே கொடுக்கப்படுள்ளன.

Post Office GDS Eligibility 2026 அடிப்படையில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பின்வரும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

  • 10ஆம் வகுப்பு தேர்ச்சி: விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் மூலம் 10th Standard / SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழ் மொழி அறிவு: தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ் மொழியை 10ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். India Post-ன் GDS விதிகளில் தமிழ்நாட்டிற்கான உள்ளூர் மொழியாக Tamil குறிப்பிடப்பட்டுள்ளது.
  • கணினி அறிவு: விண்ணப்பதாரருக்கு அடிப்படை Computer Knowledge இருக்க வேண்டும்.
  • சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்

 வயது வரம்பு விவரங்கள்

தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2026 Gramin Dak Sevaks (GDS) பணிகளுக்கான வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்படுள்ளன.

Post Office GDS Age Limit 2026:

  • குறைந்தபட்ச வயது: 18 ஆண்டுகள்
  • அதிகபட்ச வயது: 40 ஆண்டுகள்

வயது கணக்கீடு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள cut-off date அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

வயது வரம்பு தளர்வு

அரசு விதிகளின்படி தகுதியுடைய பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

பிரிவு வயது தளர்வு
SC/ST 5 ஆண்டுகள்
OBC 3 ஆண்டுகள்
PwD – UR 10 ஆண்டுகள்
PwD – OBC 13 ஆண்டுகள்
PwD – SC/ST 15 ஆண்டுகள்
Ex-Servicemen அரசு விதிகளின்படி

சம்பள விவரங்கள்

தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2026 Gramin Dak Sevaks (GDS) பணிகளுக்கான சம்பளம் விபரங்கள் கீழே கொடுக்கப்படுள்ளன.

பணி TRCA / ஊதிய வரம்பு
Branch Postmaster (BPM) ₹12,000 – ₹29,380
Assistant Branch Postmaster (ABPM) ₹10,000 – ₹24,470
Dak Sevak ₹10,000 – ₹24,470

இங்கு குறிப்பிடப்படும் தொகை GDS பணிகளுக்கான TRCA (Time Related Continuity Allowance) அடிப்படையிலான ஊதியமாகும். GDS பணியாளர்கள் வழக்கமான Central Government employees-க்கு இணையான service conditions மற்றும் benefits கொண்டவர்கள் அல்ல என்பதை India Post தனது அதிகாரப்பூர்வ தகவலில் தெளிவுபடுத்தியுள்ளது.

தேர்வு செயல்முறை

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2026 பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பின்பு அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். சான்றிதழ் சரிபார்ப்பில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும்..மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • தேர்வு நடைமுறை பொதுவாக: 10ஆம் வகுப்பு மதிப்பெண் → Merit List → Document Verification → Engagement என்ற அடிப்படையில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்

தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான விண்ணப்பக் கட்டணம் விபரங்கள் கீழே கொடுக்கப்படுள்ளன.

  • SC/ST/PWD/Female Candidates/Transwomen விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
  • கட்டண முறை: ஆன்லைன்

 முக்கிய தேதிகள்

இந்த போஸ்ட் ஆபீஸ் வேலை 2026 ஆட்சேர்ப்பில் Registration மற்றும் Application Submission ஆகியவை இரண்டு தனித்தனி கட்டங்களாக உள்ளன. இதை விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டும்.

நிகழ்வு தேதி
One-Time Registration Registration தொடக்கம் 31.08.2026
One-Time Registration Registration கடைசி தேதி 19.09.2026, மாலை 5.00 மணி
ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம் தேதி 02.09.2026
ஆன்லைன் விண்ணப்பம் கடைசி தேதி 21.09.2026, மாலை 5.00 மணி
Correction Window தொடக்கம் 23.09.2026
Correction Window கடைசி தேதி 24.09.2026, மாலை 5.00 மணி

விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2026 பனிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

India Post GDS Apply Online 2026 செய்ய விரும்புபவர்கள் கீழ்கண்ட நடைமுறையைப் பின்பற்றலாம்:

  1. முதலில் அதிகாரப்பூர்வ India Post GDS Online Engagement இணையதளத்திற்கு செல்லவும்.
  2. புதிய விண்ணப்பதாரர்கள் Registration செய்ய வேண்டும்.
  3. தேவையான தனிப்பட்ட மற்றும் கல்வி விவரங்களை சரியாக பதிவு செய்யவும்.
  4. 10ஆம் வகுப்பு மதிப்பெண் மற்றும் சான்றிதழ் விவரங்களை உள்ளிடவும்.
  5. தேவையான புகைப்படம் மற்றும் கையொப்பம் உள்ளிட்ட ஆவணங்களை upload செய்யவும்.
  6. தமிழ்நாடு Circle மற்றும் விருப்பமான Division/Post Office விவரங்களை கவனமாக தேர்வு செய்யவும்.
  7. பொருந்தும் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  8. Application Form-ஐ முழுமையாக சரிபார்த்து submit செய்யவும்.
  9. இறுதியாக submitted application-ன் print/download copy-ஐ பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.