தமிழக அரசியலில் திடீர் திருப்பம் : அமைச்சர் பதவியை பெறாத 19 மாவட்டங்கள்..!
தமிழ்நாடு அமைச்சரவையில் 19 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கபடவில்லை.
அமைச்சர்கள் இல்லாத மாவட்டங்கள்:
- திருவள்ளூர்
- திருப்பத்தூர்
- திருவண்ணாமலை
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- அரியலூர்
- கடலூர்
- கரூர்
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- பெரம்பலூர்
- திருவாரூர்
- தர்மபுரி
- கிருஷ்ணகிரி
- நீலகிரி
- திண்டுக்கல்
- தேனி
- தென்காசி
- திருநெல்வேலி
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதுநாள் வரை 10 பேர் மட்டுமே இடம்பெற்று இருந்த அமைச்சரவையில், இன்று புதியதாக 23 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில், மாநிலத்தின் 38 மாவட்டங்களில் வெறும் 19 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 20 மாவட்டங்களைச் சேர்ந்த யாரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. சில மாவட்டங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக தலைநகர் சென்னையை சேர்ந்த, முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். அதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாவது அதிகபட்சமாக 3 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். காஞ்சிபுரம், விருதுநகர், ஈரோடு, மதுரை, தூத்துக்குடி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து இரண்டு அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், கடலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, சேலம், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா ஒருவர் அமைச்சரவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

