தமிழக போலீசார் போதைப்பொருளை பிடிப்பதில்லை- ஆளுநர் ரவி
Oct 6, 2024, 17:20 IST1728215426000
தமிழகத்தில் கஞ்சா தவிர்த்த ஏனைய போதை பொருட்களை தமிழக போலீசார் கைப்பற்றவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தென்காசி சங்கரன்கோவிலில் நடைபெற்ற போதை ஒழிப்பு பேரணியில் பங்கேற்று சிறப்புரையாற்றிய ஆளுநர் ஆர்.என். ரவி, “தமிழகத்தில் மத்திய அரசு ஏஜென்சிகள் மட்டுமே கஞ்சா அல்லாத பிற போதை பொருட்களை பல கிலோ அளவில் கைப்பற்றுகின்றன. தமிழக காவல்துறையால் ஒரு கிராம் அளவு கூட கஞ்சா தவிர்த்த பிற ரசாயன போதை பொருட்களை பிடித்ததாக தகவல்களே இல்லை. 40 ஆண்டுகளுக்கு அனைத்து துறைகளிலும் முன்னிலையில் இருந்த பஞ்சாப் மாநிலம், போதையால் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது. போதைப்பொருள் கிடங்குகள் பாகிஸ்தான், துபாய், தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படுகின்றன” எனக் கூறினார்.

