கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்- சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர்

 
ச்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கடந்த ஒரு வாரமாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை கிரான் மாஸ்டர் செஸ் தொடர் நடைபெற்றது.

நடப்பாண்டு இரண்டாவது முறையாக நடைபெறும் இந்த தொடரில் மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் நம்பர் ஒன் வீரரான அர்ஜுன் எரிகைசி  உள்ளிட்ட 8 கிரான் மாஸ்டர்கள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்தினர். சேலஞ்சர்ஸ் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரனீஸ்,  வைஷாலி, ப்ரணவ் உள்ளிட்ட 8 கிரான் மாஸ்டர்கள் பங்கேற்று மௌன யுத்தம் நடத்தினர். மொத்தம் ஏழு சுற்றுகள் ஆக நடைபெற்ற மாஸ்டர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், இந்தியா நம்பர் ஒன் வீரர் அர்ஜுன் எரிகைசி, அமெரிக்காவின் லெவோன் அரோனியன் ஆகிய மூவரும் 4.5 புள்ளிகளை பெற்று சமநிலையை எட்டினர்.

மூன்று பேர்களில் யார் சாம்பியன் என்பதை தீர்மானிப்பதற்காக டைப்ரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. ஏழு போட்டிகளிலும் தோல்வியை சந்திக்காததால் அரவிந்த் சிதம்பரம் தோல்வியை சந்திக்காததால் அரவிந்த் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். பிளே ஆஃப் டைப்ரேக்கர் போட்டியில் அர்ஜுன் எரிகைசியும் லெவோன் அரோனியனும் பலப்பரீட்சை நடத்தினர் இதில் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற ஆட்ட கணக்கில் லெவோன் அரோனயன் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவின் லெவோன் ஆரோனியனை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற ஆட்டக் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் முதல் முறையாக இதுபோன்ற ஓபன் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இதேபோல் நடப்பாண்டிலும் தமிழ்நாட்டைச்சேர்ந்த வீரர் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளனர்.

சாம்பியன் பட்டம் என்ற அரவிந்த் சிதம்பரத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் 15 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. நடப்பாண்டு முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட சேலஞ்சர்ஸ் தொடரில் ஏழு சுற்றுகளில் முடிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரணவ் 4 வெற்றி, 3 டிரா என 5.5 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வசமாக்கினார். சேலஞ்சர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்ற பிரணவ் அடுத்த ஆண்டு நடைபெறக்கூடிய மாஸ்டர் தொடருக்கு தகுதி பெற்றுள்ளார். பட்டம் வென்ற பிரணவிற்கு 6 லட்சம் ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட உள்ளது. மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் என இரண்டு பிரிவிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் சாம்பியன் பட்டம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமையை தேடித் தந்துள்ளனர்.