தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு.. கர்நாடக விவசாயிகள் விடிய விடிய போராட்டம்..

 
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு.. கர்நாடக விவசாயிகள் விடிய விடிய போராட்டம்..


தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதற்கு  எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள்  விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

கர்நாடகாவுக்கும் தமிழகத்துக்கும் இடையே நீண்ட காலமாக காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்காக பங்கீடை முறையாக திறந்துவிட உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பேரில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.  அதன்படி கர்நாடகாவின் கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 7,329 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.  

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு.. கர்நாடக விவசாயிகள் விடிய விடிய போராட்டம்..

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாய சங்கங்கள்  மண்டியா மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  விவசாயிகள் புதன்கிழமை (நேற்று) காலை முதல் இரவு முழுவதும் கே.ஆர். எஸ் அணை முன்பு  தொடர்ச்சியாக விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலத்தில் இருக்கும் நீர் நிலைமை குறித்து ஆராயாமல் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக  விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர்.  இரவு முழுவதும் கையில் தீப்பந்தம், மெழுகுவர்த்தி ஏந்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் டெல்லி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.