அக்.5ல் கேரளம் முதல்வரை சந்திக்கிறது தமிழக அமைச்சர்கள் குழு
அக்.5ஆம் தேதி கேரளம் முதல்வரை தமிழக அமைச்சர்கள் குழு சந்திக்கிறது.
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் பாசனத் தேவையை மேம்படுத்த உதவும். ஆனைமலையாறு -நல்லாறு திட்டம் தொடர்பாக கேரளம் முதலமைச்சரை அக்.5ம் தேதி சந்திக்கிறது தமிழ்நாடு அமைச்சர்கள் குழு. அக்.5ல் அமைச்சர்கள் ஆனந்த், கே.ஏ.செங்கோட்டையன், அருண்ராஜ், ராஜேஷ்குமார் ஆகியோர் கேரளம் முதல்வரை சந்திக்கின்றனர். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தைப் போல், ஆனைமலையாறு- நல்லாறு திட்டம் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாகும். 63 ஆண்டுகால கோரிக்கையான ஆனைமலையாறு -நல்லாறு திட்டத்தை தவெக அரசு நிறைவேற்றும் என கொங்கு விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பி.ஏ.பி ஒப்பந்தபடி கேரளா இடைமலையாறு அணையைக் கட்டிய பின் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், கேரள அரசு உரிய ஒப்புதல், நிறைவுச் சான்றிதழ் தராமல் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை காலதாமதம் செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

