பெரியார், காமராஜர் விருதுகளை அறிவித்த தமிழக அரசு - அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது..!

 
1 1

2026 ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது முனைவர் சத்தியவேல் முருகனாருக்கு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். இதே போன்று, 2025 ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்பட உள்ளது.

2026-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2025-ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க.விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது ஆகிய விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

பெரியார் விருது வழக்கறிஞர் அருள்மொழிக்கும், அம்பேத்கர் விருது விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வனுக்கும், காமராசர் விருது இதயத்துல்லாவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, 2025 ஆம் ஆண்டிற்கான மகாகவி பாரதியார் விருது நெல்லை ஜெயந்தாவிற்கு வழங்கப்பட உள்ளது.

விவரம் பின்வருமாறு:-

* அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகனுக்கு 2025-ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

* 2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாருக்கு வழங்கப்பட உள்ளது.

* 2025-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது வழக்கறிஞர் அ.அருள்மொழிக்கு வழங்கப்பட உள்ளது.

* 2025-ம் ஆண்டுக்கான அண்ணல் அம்பேத்கர் விருது சிந்தனை செல்வனுக்கு வழங்கப்படுகிறது.

* எழுத்தாளரும், முன்னாள் தலைமைச் செயலாளருமான வெ.இறையன்பு-க்கு திருவிக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

* கவிஞர் யுகபாரதிக்கு தமிழ்நாடு அரசின் 2025-ம் ஆண்டுக்கான பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்பட உள்ளது.

* காமராஜர் விருது – எஸ்.எம்.இதயத்துல்லா

* மகாகவி பாரதியார் விருது – கவிஞர் நெல்லை ஜெயந்தா