தமிழக MBBS சேர்க்கை.. எதிர்பார்க்கப்படும் கட்-ஆஃப் வெளியீடு..!

 
neet

தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பது குறித்து மிஸ்பா கேரியர் அகாடமி என்ற யூடியூப் சேனலில் கல்வி ஆலோசகர் டேனியல் பிரதீப் விளக்கியுள்ளார். வீடியோவின்படி,இந்த ஆண்டு NEET தேர்வில் அதிக மதிப்பெண்கள் பதிவாகியுள்ளதால், கடந்த ஆண்டைவிட கட்-ஆஃப் 30 முதல் 40 மதிப்பெண்கள் வரை உயரக்கூடும் என கல்வி வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கட் ஆஃப்

  • பொதுப் பிரிவு – 560 - 579
  • பி.சி – 515 - 525
  • பி.சி.எம் – 510 - 520
  • எம்.பி.சி – 510 - 520
  • எஸ்.சி – 455 - 470
  • எஸ்.சி.ஏ – 410 - 420
  • எஸ்.டி – 415 - 425

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட் ஆஃப்

  • பொதுப் பிரிவு – 520 - 530
  • பி.சி – 495 - 510
  • பி.சி.எம் – 490 - 505
  • எம்.பி.சி – 490 - 505
  • எஸ்.சி – 425 - 435
  • எஸ்.சி.ஏ – 390 - 400
  • எஸ்.டி – 390 - 400