தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் ஹசீனா திடீர் நீக்கம்..? காரணம் இது தான்..!

 
1

சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத், "காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தவரை தேர்தலில் போட்டியிடுவதற்கு 33% பெண்களுக்கான இடஒதுக்கீடு உள்ளது. கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான செயல்பாடுகளை மேற்கொண்டு வந்தேன்.

ஆனால் காங்கிரஸ் கமிட்டி தரப்பில் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் யாருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை. ஶ்ரீவல்ல பிரசாத், எம்.பி. சுதா கூறியதைக் கேட்டு எனக்கு கொடுக்கப்பட்ட சீட்டை தடுத்துவிட்டார்கள். புதுச்சேரியிலும், தமிழ்நாட்டிலும் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் சீட் கொடுக்கவில்லை.கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் கட்சிக்காக உழைத்துள்ளேன். எங்களுக்கு நடந்தது மிகப்பெரிய அநியாயம்; இதற்கு மாநில தலைவர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

33% இடஒதுக்கீட்டின் படி 28 இடங்களில் 9 இடங்கள் எங்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். எதற்காக எங்களுக்கு துரோகம் செய்துள்ளீர்கள். தொடர்ச்சியாக நானும், தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளும் வஞ்சிக்கப்பட்டுள்ளோம். ஏற்கனவே மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு இடம் கொடுப்பதில்லை. நிகழ்ச்சிகள் நடக்கும்போது பெயரைக் கூட குறிப்பிடுவதில்லை. நான் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இப்படி செய்கிறீர்களா? என பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

தேசிய தலைவரும், மாநிலத் தலைவரும் சேர்ந்து எங்களுக்கு துரோகம் செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், கடந்த ஏப்ரல் 5- ஆம் தேதி என்னை தொலைபேசியில் அழைத்து மேலூர் தொகுதியில் உனக்கு சீட் வழங்கப் போகிறோம். ஆவணங்கள் எல்லாம் தயார் செய்துக் கொள்ளுமாறு கூறினார். நானும் தயார் செய்தேன். ஆனால் மாற்றி ஒருவருக்கு அறிவித்தனர் ன்றார்.

இந்த நிலையில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு மகளிர் காங்கிரஸின் தலைவரான ஹசீனா சையத், கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக, உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார். கட்சியின் ஒழுக்கத்தையும், நேர்மையையும் பேணும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படும் நடவடிக்கைகள், கட்சியின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஹசீனா சையத் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், நான் முன்பு இருந்த கட்சியில் கோட்பாடுகள் முக்கியமாக , அல்கா லம்பாவின் செயல்பாடு பைத்தியகாரத்தனமாக உள்ளன. நான் ஏற்கனவே ராஜினமா கொடுத்துவிட்டு விலகிவிட்டேன். இந்த நிலையில் மீண்டும் ஏன் நீக்கியதாக போட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.