தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் : ஆளுநர் உரைக்கு பதிலளிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

 
stalin

தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியது. இதில் தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என். ரவி உரையாற்றினார். ஆளுநர் உரை நிறைவு பெற்ற பிறகு அலுவல் கூட்டம் நடைபெற்று,  சட்டப்பேரவை ஜனவரி 7-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று இரண்டாவது நாள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது .இதில் மறைந்த தமிழக முன்னாள் கவர்னர் ரோசய்யா , நடிகர் புனித் ராஜ்குமார், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 14 பேர்,  மனித உரிமை செயற்பாட்டாளர் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு மறைவுக்கு இரங்கல் தீர்மானம் தெரிவிக்கப்பட்டது.

ttn

இதைத்தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரலாற்றில் தமிழக வரலாற்றில் முதல் முறையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.  அத்துடன் பேரவை விதி எண் 110 கீழ் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீட் விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் நாளை நடைபெறும் என்று அறிவித்துள்ளார். 

stalin

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு  வினா - விடை நேரத்துடன் தொடங்குகிறது. இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் திருத்தச் சட்ட முன்வடிவை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிமுகம் செய்கிறார். நகராட்சி சட்டங்கள் திருத்த சட்ட முன்வடிவை அமைச்சர் கே.என்.நேரு அறிமுகம் செய்கிறார். அதேபோல் சென்னை மாநகர காவல் சட்ட முன்வடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்யவுள்ளார். சட்ட முன்வடிவுகள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்குகிறார்.  அத்துடன் கூட்டத் தொடரில் கொண்டுவரப்பட்ட சட்டமுன்வடிவுகள் நிறைவேற்றப்படுகின்றன.