‘எல்லார்க்கும் எல்லாம் - எதிலும் தமிழ்நாடு முதலிடம்’ - கலைஞர் நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் பதிவு.!!

 
 ‘எல்லார்க்கும் எல்லாம் - எதிலும் தமிழ்நாடு முதலிடம்’ என்கிற இலக்கை நோக்கி நடைபோடுவோம் - முதல்வர் ஸ்டாலின்..!!


எல்லார்க்கும் எல்லாம் - எதிலும் தமிழ்நாடு முதலிடம் என்னும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 7ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.  எழுத்தாளர், கவிஞர், திரைக்கதை வசனகர்த்தா, சொற்பொழிவாளர், இலக்கியவாதி, தலைசிறந்த தலைமைபண்பு,  ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர், 13 முறை சட்டமன்ற உறுப்பினர்,  அரைநூற்றாண்டுகால அரசியல் வாழ்க்கை என கலைஞர் கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். சிறந்த அரசியல் வழிகாட்டியாக , ஒப்பற்ற கலைஞராக திகழ்ந்த முத்தமிழறிஞர் கருணாநிதியின் 7 ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.  

சாதி, மதம், அரசியல் கடந்து ‘ஓரணியில் தமிநாடு’ வெல்லட்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

 இதனையொட்டி கலைஞரை நினைவுகூர்ந்து  எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தலைவர் கலைஞர் -
முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த பிறப்பு!
தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு!

அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக் காத்திட – முன்னேற்றிட உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் “எல்லார்க்கும் எல்லாம்” – “எதிலும் தமிழ்நாடு முதலிடம்” எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.