தமிழக உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் மாற்றம்- தேர்தல் ஆணையம் அதிரடி
Updated: Apr 19, 2026, 12:03 IST1776580425327
தமிழக உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஐஜியாக அவினாஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள. இதனையொட்டி திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என தவெக உள்ளிட்ட கட்சியினர் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்படி டிஜிப், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் மாற்றப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு உளவுத்துறை ஐ.ஜியை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


