டெல்லியில் ஜல்லிக்கட்டு காளையுடன் அணிவகுத்த தமிழ்நாடு அரசின் வாகனம்..!
Jan 27, 2026, 07:20 IST1769478628000
77வது குடியரசு தினத்தையொட்டி டெல்லி கடமைப்பாதையில் நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் வாகனம் அணிவகுத்தது. தமிழக அரசின் வாகனத்தில் ஜல்லிக்கட்டு காளையை மாடுபிடி வீரர்கள் அடக்குவது போன்ற முகப்பு காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும் அலங்கார வாகனத்தின் இருபுறமும் கலைஞர்கள் சிலம்பாட்டம், மயிலாட்டம் ஆடியபடி சென்றனர்.
இதேபோல், அசாம், சத்தீஸ்கர், குஜராத், இமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் வாகனங்கள் அணிவகுத்தன. மேலும், கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், நாகலாந்து, ஒடிசா, ராஜஸ்தான் மாநிலங்களின் வாகனங்கள் அணிவகுத்தன. தமிழ்நாடை தொடர்ந்து, புதுச்சேரி, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், மத்திய பிரதேசம், பஞ்சாப் வாகனங்கள் அணிவகுத்தன.


