தமிழக அரசு புதிய துறை உருவாக்கம்..!
தமிழக அரசின் புதிய அறிவிப்பின்படி, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை தனித்துறையாக செயல்பட உள்ளது. இதன் மூலம் இந்து சமய அறநிலையங்கள் தொடர்பான நிர்வாகப் பணிகளுக்கு தனி துறை கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை சுற்றுலா மற்றும் பண்பாடு துறைகளின் உள்ளே இருந்த சமய அறநிலையங்கள் தொடர்பான நிர்வாகம், இனி புதிய துறையின் கீழ் செயல்படும்.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையரகம், புதிதாக உருவாக்கப்பட்ட இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த நிர்வாக நடவடிக்கைகள் தனித்துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட உள்ளன.
புதிதாக உருவாக்கப்பட்ட இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறையை, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன் கூடுதலாக கவனிப்பார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
புதிய துறை உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அதன் நிர்வாகப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் இனி தனித்துவமான கட்டமைப்பின் கீழ் முன்னெடுக்கப்பட உள்ளன.
இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை உருவாக்கம் தமிழக அரசின் முக்கிய நிர்வாக மாற்றங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த புதிய துறையின் கீழ் இந்து சமய அறநிலையங்கள் தொடர்பான நிர்வாகம் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.

