மறுமணம் செய்து கொள்ளும் பெண்களின் திருமணத்திற்கு தமிழக அரசு நிதியுதவி..!

 
1 1

தமிழகத்தில் கைப்பெண்களின் மறுமணத்தை ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட திட்டம் தான், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டமாகும். இத்திட்டத்தில் மூலம் கணவனை இழந்த பெண்களின் மறுதிருமணத்திற்கு உதவித் தொக வழங்கப்படும்.  இந்த திட்டம் 1975ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், இந்த திட்டம் மூலம் எண்ணற்ற பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இவர்களுக்காக ஆண்டுதோறும் தமிழக அரசு மறுமணத்திற்கு உதவித் தொகை வழங்கி வருகிறது. உதவித் தொகை மட்டுமில்லாமல், தங்கமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்ம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஏழை, எளிய விதவை பெண்களுக்கு உதவும்.

இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விரும்பும் பெண்கள், கைம்பெண்ணாக இருக்க வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். திருமணத்தின்போது மறுமணம் செய்து கொள்ளும் பெண் 20 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அதேபோல, மணமகன் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.  இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஆண்டு வருமானம் என எந்த உச்சவரம்பும் இல்லை.   மறுமணம் செய்து கொண்ட ஆறு மாதத்திற்குள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். 

விதவை மறுமண நிதியுதவித் திட்டம்: நன்மைகள் என்னென்ன?

திட்டம் 1 - இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் 8,10,12ஆம் வகுப்பு படித்தவர்களாக இருக்கும்போது, மறுமணம் செய்து கொள்ளும் பெண்களின் திருமணத்திற்கு ரூ.25,000 வழங்கப்படும். மேலும், தாலிக்கு 22 கேரட் 8 கிராம் தங்கம் வழங்கப்படும். மொத்த தொகையில் ரூ.15,000 ரொக்கமாகவும், மீதி தொகை  தேசிய சேமிப்பு சான்றிதழாக வழங்கப்படும். இந்த தேசிய சேமிப்பில் இருக்கும் தொகையை வட்டியுடன் சேர்த்து கணவன், மனைவி இருவரும் எடுத்துக் கொள்ள முடியும்.

திட்டம் 2 - மறுமணம் செய்து கொள்ளும் பெண் பட்டப்படிப்பு (Degree) அல்லது பட்டயப்படிப்பு (Diplomo) முடித்திருப்பவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ரூ.50,000 வழங்கப்படும். மேலும், 22 கேரட் 8 கிராம் தங்கம் வழங்கப்படும். இதில் மொத்த தொகையில் ரூ.30,000 ரொக்கமாக வழங்கப்படும். மீதி ரூ.20,000 தேசிய சேமிப்பு சான்றிதழில வழங்கப்படும். இதனை 5 வருடங்களுக்கு பிறகு எடுத்துக் கொள்ளலாம். 

எப்படி விண்ணப்பிக்கலாம்?

விதவை மறுமண நிதியுதவி திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பெண்களி, அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும்.  அலுவலகத்திற்கு செல்லும்போது, தேவையான ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும். மேலும், அங்குள்ள அதிகாரிகள் உங்களுக்கு விண்ணப்ப படிவத்தை கொடுப்பார்கள். இதனை சரியாக நிரப்பி ஒப்படைக்க வேண்டும். உங்களது ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அனைத்து சரியாக இருக்கும் பட்சத்தில் உங்கள் வங்கி கணக்கில் தொக டெபாசிட் செய்யப்படும். அல்லது அருகில் இ சேவை மையத்திற்கு சென்றும் விண்ணப்பிக்கலாம்.

தேவையான ஆவணங்கள்

விதவை மறுமண நிதியுதவித் திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள்  முதல் கணவரின் இறப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ், மறுமணத்தின் எடுக்கப்பட்ட புகைப்படம், ஆதார் கார்டு, பான் கார்டு, ரேஷன் கார்டு,  மறுமணத்தின் திருமண பத்திரிக்கை, இருப்பிட சான்று, கணவன் மனைவி இணைப்பு வங்கி கணக்கு புத்தக நகல், சாதி சான்றிதழ், மணமகன், மணமகள் கல்வித்தகுதி சான்றிதழ், மணமகனுக்கு முதல் திருமணம் என்பதற்கான சான்று ஆகியவற்றை கொண்டு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.