பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சட்டதிட்டங்கள் தேவை - ஜி.கே.வாசன்

 
gk vasan

தமிழக அரசு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து சட்டதிட்டங்களையும் பயன்படுத்த வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

tn

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து சட்டதிட்டங்களையும் பயன்படுத்த வேண்டும்.

gk
நியூஸ் 7 தொலைக்காட்சியின் பத்திரிகையாளர் தாக்கப்பட்ட சம்பவம் சம்பந்தமாக பத்திரிகையாளர் மன்றம் விடுத்திருக்கின்ற கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். 

தாக்கப்பட்டுள்ள நியூஸ் 7 தொலைக்காட்சியின் பத்திரிகையாளர் விரைவில் குணமடைந்து மீண்டும் பத்திரிகைத்துறையில் தனது சிறப்பான பணியை தொடர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.