தமிழக அரசு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட, முடிவு..??

 
Q

தமிழகத்தில் வீடுகளில், மின் பயன்பாட்டை கணக்கு எடுக்க, மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. சில பணியாளர்கள் நேரில் செல்லாமல், கணக்கு எடுப்பதால், நுகர்வோர் பாதிக்கப் படுகின்றனர்.

எனவே, ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்த, மின் வாரியம் முடிவு செய்தது. அந்த மீட்டரில், மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்பட வேண்டிய தேதி, மென்பொருளில் பதிவேற்றப்படும். தொலை தொடர்பு வசதியை ஏற்படுத்தி, தானாகவே கணக்கு எடுத்து, மின் கட்டண விபரம், நுகர்வோரின் மொபைல் போன் எண்ணுக்கு அனுப்பப்படும்.

ஆறு தொகுப்புகளாக, 3.04 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தி, 93 மாதங்களுக்கு பராமரிக்கும் வகையில், ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, 2025 மார்ச்சில், 'டெண்டர்' கோரப் பட்டது. திட்ட செலவு, 20,000 கோடி ரூபாய். டெண்டரில், 50 நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், அவை வழங்கிய தொழில் நுட்பப்புள்ளி, அந்த ஆண்டு இறுதியில் திறக்கப்பட்டன.

இந்த விபரங்கள் அரசுக்கு அனுப்பப்பட்டு, விலைப்புள்ளி திறக்க அனுமதி கேட்கப்பட்டது. சட்டசபை தேர்தலுக்கு பின், விலைப் புள்ளி திறக்க திட்டமிடப்பட்டது.

தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்து, முதல் வராக விஜய் பதவியேற்றுள்ளார். முறைகேடு புகாரை அடுத்து, மின் வாரியத்தில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அறிவிக்கப்பட்ட, 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான, 'டெண்டர்'கள் ரத்து செய்யப்பட்டன.

வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தால், அரசுக்கு செலவு அதிகரித்துள்ளது.

எனவே, நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில், தற்போது, 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தை கைவிட, அரசு முடிவு செய்துள்ளது.